Friday, November 16, 2018

*வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்!*

MUST READ AND FOLLOW THIS

*வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்!*

         20 வயசுக்கு அப்புறம், வெளிநாடும், உள் நாடும் ஒண்ணு தான் (எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம்)

30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். (கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்) 

40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான் (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க)

50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான். (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்)

60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான். (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்)

70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான் ( மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்)

80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்..(அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்)

90 வயசுக்கு அப்புறம் ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான் (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்)

100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது)

என் வாழ்க்கையும், உங்க வாழ்க்கையும் ஒண்ணு தான்...

*அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..*

என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப் பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு துயரப் படுறத விட்றுவோம்!

நார்மன் வின்சென்ட் பீலே என்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் “The power of positive thinking” என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார்...

தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார்.

தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப் பட்டு செய்யும் செயல்கள் கூட துன்ப மயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார்.

பீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.

கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் கோட்டுக்கு இடது பக்கம் துன்ப மயமான நிகழ்வுகளையும் எழுதச் சொன்னார்.

வந்தவரோ “என் வாழ்க்கையை பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது” என்று புலம்பிக் கொண்டு அந்த துண்டு காகிதத்தை வாங்கினார்.

சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது வலது பக்கம் காலியாகவே இருந்தது.

இப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.

“உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார்.

அதற்கு அவர் எனது மகன் ஜெயிலுக்கே போக வில்லையே என்று கூறினார்.

“இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார்.

தொடர்ந்து “உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?” என கேட்ட கேள்விக்கு என் மனைவி என்னுடன் தான் இருக்கிறாள் என்றார்.

“எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?” என்ற கேள்விக்கு சாப்பிடாமல் நான் இருந்ததில்லை என்று பதிலளித்தார்.

“உங்கள் வீடு தண்ணீரில் இழுத்து சென்ற போது என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு என் வீடு பத்திரமாகத் தான் இருக்கிறது என்று பதில் கூறினார்.

இப்படி ஒவ்வொரு கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் வலப் புறம் நிரம்பியிருந்தது.

இடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது.

கடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை.

அது போல முழுக்க முழுக்க துன்ப மயமான நிகழ்ச்சியைகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை.

இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை...

ஆனால் சிலர் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்...

கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக் கூடாது...

அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளு பலகையாக இருக்க வேண்டும்.

*என்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று முடிவெடுங்கள்...*

மகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்...

வாசிக்கிறதை நிறுத்தி விட்டு பேனாவையும் துண்டு காகிதத்தையும் எடுத்து கோடு போட ஆரம்பிச்சிட்டீங்களா...?

மகிழ்ச்சியாய் எழுத ஆரம்பியுங்கள்... வலது பக்கம் நிரம்பட்டும். இடது பக்கம் காலியாகட்டும்....

Feel the  power of  positive  Thinking... *That is the BIGGEST SECRET OF LIFE...*

Tuesday, November 13, 2018

யாரோ..? யாருக்கோ..? கிருக்கிய பிழை...!!!

யாரோ..? யாருக்கோ..? கிருக்கிய பிழை...!!!

டிராபிக் லைட்டில் பச்சை விழும் முன்பே இச்சையை அடக்க முடியாமல் முந்திப் பறப்பார்கள்.

போலீசாரைக் கடந்தவுடன் ஹெல்மெட்டை தூக்கி பெட்டியில் ஒளிப்பார்கள்.

இலவசத்தை ஒழிக்கணும்னு உதார் விட்டு விட்டு, ஏழைகளுக்காக அரசு தந்த இலவச வண்ணத் தொலைக்காட்சியை அரை விலைக்குக் கேட்பார்கள்.

பிளாட்பார விபத்து வழக்கில் சல்மான் கான் விடுதலையை விமர்சித்துவிட்டு, சாலையில் பார்க்கும் விபத்துகளை சலனமின்றிக் கடப்பார்கள்.

காரியங்கள் சாதித்துக்கொள்ள கையூட்டு தருவார்கள்.

புகழ்கிறேன் என சொல்லி பொய்யூத்தி வைப்பார்கள்.

பதின்ம வயதுக்காரன் பரிமாற, வாழையிலையில் வயிறார விருந்துண்பார்கள்.

ரத்த உதவி கேட்டு வரும் மெசேஜ்களை வாட்ஸ்அப் குரூப்பில் போட்டுவிட்டு புண்ணியம் தேடுவார்கள்.

பேஸ்புக்கில் பத்தாயிரம் பேரை நண்பர்களாக்கிக்கொண்டு பக்கத்துக்கு ப்ளாட்காரர் பெயரைக் கேட்டால் முழிப்பார்கள்.

கோக்கை குடித்துக்கொண்டே கையேந்தி பவனின் சுகாதாரம் அளப்பார்கள்.

பொருளாதாரம் பற்றி வகுப்பெடுத்துவிட்டு ஃப்ரீ wifi பாஸ்வேர்டு கேட்பார்கள்.

பஸ்ஸிலும் பார்க்கிலும் பிறர் பார்க்கும்போதே பொட்டலம் பிரித்து உணவு உண்பார்கள்.

டாக்கிங் டாமை கொஞ்சும் நேரத்தில் கொஞ்ச நேரம் கூட வேலைக்கார்கள்,  குழந்தைகளைக் கொஞ்சுவதில்லை.

கேட்பது நண்பனாக இருந்தாலும், கடனைப் பற்றி கதைகள் பேசிவிட்டு கை விரிப்பார்கள்.

பின்னால ஃப்ளைட்டே வந்தாலும், நினைத்தவுடன் இண்டிகேட்டர் போட்டு நினைத்த இடத்தில் திரும்புவார்கள்.

போக்குவரத்து நெரிசல் எனத் தெரிந்தும் ஓயாமல் ஹாரன் அடிப்பார்கள்.

முழு போதையில் கணக்கு தவறென டாஸ்மாக் சப்ளையரிடம் வம்பிழுப்பார்கள்.

அன்று சந்தித்த அழகான பெண்ணை, இரவு கனவினில் இல்லத்தரசியாக்கிக் கொள்வார்கள்.

தவறாக யாரேனும் குறுக்க வந்தால் கூட, மனசுக்குள் கெட்ட வார்த்தை சொல்லிப் பார்ப்பார்கள்.

குறுக்கு வழிகளை குழந்தைகளுக்கும் சொல்லித் தருவார்கள். பிள்ளைகள் மனதில் போட்டி, பொறாமைகளைப் பதிய வைப்பார்கள்.
   நீண்ட நெடிய வரிசையில் இடையில் நுழைய வாய்ப்பிருக்கா என பார்ப்பார்கள்.

கர்ப்பிணியோ கிழவியோ நின்றே பயணிப்பதைப் பார்த்தாலும், தூங்குவது போல பாசாங்கு செய்வார்கள்.

கவுன்சிலரைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு காந்தியையும் காமராஜரையும் கக்கனையும் கிழிப்பார்கள்.

வீட்டுக்குள் வெள்ளம் வராவிட்டால் கூட, நிவாரண நிதிக்கு பேர் கொடுப்பார்கள்.

பெரியாரின் பேரன் போல பேசினாலும், ஜாதி தெரிந்த பின்தான் பழகுவார்கள்.

    நேர்மை, நாணயம் பேசிக்கொண்டே, சிபாரிசு கிடைக்குமா என தேடிப் போவார்கள்.
     மன அமைதிக்கு யோகா கிளாஸ் சென்றுவிட்டு, வெளியே டூ வீலரில் யாராவது உட்கார்ந்திருந்தால் சண்டைக்குப் போவார்கள்.
    திரையுலகம் தவறான வழியில் செல்கிறதென விமர்சித்தபடி திருட்டு டி.வி.டியில் படம் பார்ப்பார்கள்.

இப்படியாக எல்லாவற்றையும் மறக்காமல் மாறாமல் செய்துகொண்டே,
மாற்றம் வேண்டுமென, ஒழுங்காகப் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசியலுக்கு அழைப்பார்கள்.

   மாற்றங்கள் மற்றவர்கள் கொண்டு வருவதல்ல;
என்னை நானும்
உன்னை நீயும் மாற்றினால்,
நாம் உலகை மாற்றலாம்.

இறைவன் அளித்த கொஞ்ச நாள் வாழ்க்கையில் உண்மையாகவும், உருப்படியாகவும் வாழ்ந்து பார்ப்போமே.

Monday, November 12, 2018

தேன் நெல்லிக்காய்

தேன் நெல்லிக்காய்

தினமும் ஒரு நெல்லிக்காய் சேர்த்தால் நல்லது.
ஆனா, பச்சையா சாப்பிட்டா, முழுசா ஒன்னை சாப்பிடறதே கஷ்டம். என்ன செய்யலாம்?

கடையில தேன் நெல்லிக்காய்-ன்னு கிடைக்குது, விலை அதிகம். உண்மையான தேன்ல தான் ஊற வைக்கிறாங்களான்னா. சந்தேகம் தான். பெரும்பாலும், சர்க்கரைப்பாகுன்னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்றாங்க. அதனால அதை வாங்குறது இல்ல. அனுபவம் வாய்ந்த நண்பர்கள் உதவியோட இந்த `வெல்லம் நெல்லிக்காய்' ரெசிப்பியை உருவாக்கி பல வருசங்களா தினமும் வீட்டுல எல்லாரும் சாப்பிட்டுட்டு வர்றோம்.

சூப்பரா இருக்கு, ஹெல்த்தும், ருசியும் ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேகவைக்கத் தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும். பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.
அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை. இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க. ரொம்ப காச்சணும்னு இல்ல.

பிசுபிசுன்னு வந்தவுடன் இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு, ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும்

நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்புறம், மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிச்சிருங்க. நெல்லிக்காயின் சத்துகள் இறங்கியிருக்கிறதால அதை வேஸ்ட் பண்ண வேண்டாமே:

சர்க்கரை_வியாதி

#சர்க்கரை_வியாதி_என்று_உங்களை #ஏமாற்றியவன்_இறுதியில்_உங்கள்_விரல் #அல்லது_காலை_எடுக்க_சொல்வான்😡

அவர்களுக்காக ஒரு பதிவு!

விரலை_வெட்ட_வேண்டாம்:👌

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என
ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.🌷

மேலும் விபரங்கள் கீழே.!
👇👇👇👇👇👇👇👇👇👇

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,

சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும், அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும், அதனுடைய வலி இதற்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனக்கு தெரிந்தவரின் காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்ற முடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை.🏨

இதற்கு கண்கண்ட மருந்து👀

#ஆவாரம்_இலை:#🌿🌿🌿🌿🌿🌿🌿

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிர்ந்தால் பலரின்
கால்களையும் விரல்களையும் காப்பாற்றுவோம்.!
படித்தேன்...பகிர்ந்தேன்..

Thoughts

*#எண்ணங்கள்#*

*எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது.*

*"ஆயிரம் முறை சொன்னால் யானையும் சாகும்" என்பர் பெரியோர். அதனால் தான் ஆலயங்களில் லட்ச்சார்ச்சனை, கோடியர்ச்சனை போன்றவைகள் நிகழ்கின்றன.*

*எண்ணங்களின் சக்தி அதே எண்ணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது.*

*எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.*

*எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.*

*நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்றவேண்டும். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.*                                  

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.*

*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை*

*#வாழ்க_வளமுடன்•*