Sunday, December 31, 2017

Thirukural-1

_*♨ இன்றைய திருக்குறள்♨*_

*📆01➖01➖2018📆*

*🕹குறள்: 239*

*⚖வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா*
     *யாக்கை பொறுத்த நிலம்*

*💪🏻அதிகாரம்: 24*

*⭕புகழ்*

*👨🏻‍💻சாலமன் பாப்பையா உரை*

_☀புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்._

*👨🏻‍💻மு. வரதராசனார் உரை*

_☀புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்._

Thanks to: வசந்தம்செய்திகள்

Tuesday, December 26, 2017

Forest Life Tour-Coimbatore

சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்தும் பரளிக்காடு!

கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள காரமடையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ளது காரமடை வனப்பகுதி. இப்பகுதியில் மலைவாழ் மக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் சுற்றுலாவை நடத்தி வருகிறது காரமடை வனத்துறை.
சனி, ஞாயிறுகளில் அனுமதி. 20 பேருக்கு குறையாமல் முன்பதிவு செய்தால், எந்த நாளிலும் அனுமதிப்பார்கள். பரிசல் பயணம், மதிய உணவு, ஆற்று குளியலுக்கு பெரியவர்களுக்கு ரூ.300, 15 வயதுக்கு உட்பட்ட சிறியவர்களுக்கு ரூ.200 கட்டணம்.

கோவையில் இருந்து காரமடை வழியாக இரண்டரை மணி நேர பயணத்தில் பரளிக்காடு அடையலாம்.
காலை 10 மணி அளவில் பூச்சிமரத்தூரில் உள்ள பரிசல்துறையில் தயாராக இருக்க வேண்டும். அங்கு செல்ல பஸ் வசதி இல்லை. பைக், காரில் செல்லலாம்.

வனத்துறையினர், அப்பகுதி மலைவாழ்மக்கள் வரவேற்பார்கள். சுக்கு காபி கொடுத்து உபசரிப்பார்கள். பரிசல் கரையில் இயற்கை எழிலோடு பெரிய மரங்களும், நிழலும் ஆசுவாசப்படுத்தும். அங்கிருந்தவாறு பரிசல் நடக்கும் பில்லூர் ஆற்றின் அழகை, இருபுறமும் மலைகள் பசுஞ்சுவராய் காட்சியளிப்பதை ரசிக்கலாம்.

30க்கும் அதிகமான பரிசல்கள் உள்ளன. ஒரு பரிசலில் 4 பேர் வீதம் செல்லலாம். 2 மணி நேரம் பரிசலில் பயணிக்கலாம். மலையடிவாரங்களில் தற்காலிகமாக இறங்கி ஓய்வெடுக்கலாம். வனப்பகுதியில் காலாற நடக்கலாம். அங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளை பார்வையிடலாம். சலிக்க, சலிக்க மேற்கொண்ட பரிசல் பயணம் முடிந்து பரிசல் கரையில் இறங்கினால் மலைவாழ் மக்கள் சமைத்த உணவு தயாராக இருக்கும்.

அதில் களி உருண்டை, நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, கேசரி, சப்பாத்தி, கீரை மசியல், வெங்காய தயிர்பச்சடி, தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய் மினரல் வாட்டர் வழங்குவார்கள். உணவின் ருசி நம்மை கிறங்கடிக்கும்.

பரிசல் கரையில் உள்ள மர கயிறு ஊஞ்சலில் விளையாடி மகிழலாம்.அங்கிருந்து மாலை 3 மணியளவில் வனத்துறையினர் காரமடை செல்லும் வழியில் 20 கி.மீ. தூரத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு அழைத்து செல்வார்கள். கூழாங்கற்கள் நிறைந்த ஆற்றின் நீர் குளிர்ச்சியானது. மூழ்கி எழுந்தால் மொத்த களைப்பும் பறந்துபோய் புத்துணர்ச்சி வந்துவிடும்.

ஆற்றில் 5 மணி வரை ஆட்டம் போடலாம். பின்னர் வனத்துறையினர் வழியனுப்பி வைப்பார்கள். பரிசல் பயணம், ஆற்றுக்குளியல் வனத்துறையினரின் கண்காணிப்பில் நடப்பதால் தைரியமாக செல்லலாம். பரளிக்காடு சுற்றுச்சூழல் வனச்சுற்றுலாவை குடும்பத்தோடு குதூகலிக்கலாம். வன அதிகாரியை 944655663 , 0422- 2302925 , 9655815116 , 0422-2456911 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு 3 நாள் முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.

A Real truth about parents

💞💞 *உண்மைச் சம்பவம்.* 💞💞

*தன் மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தகப்பனின் உணர்வுப் பூர்வமான எச்சரிக்கை...!!!*

*தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்... ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று...*

*ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்...*

*ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள்.. அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்...*

*பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்... அப்படி மகிழ்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம்போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா??? என கேட்டார்...*

*மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்...*

*அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...*

*அப்பா சொன்னார்.. மகளே.. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை கீழடக்க இந்த நூல் உதவியாய் இருக்கிறது...*

*இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனதுபோல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்...*

*இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை... நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்...!!!*

*ஆம் அன்பான  பிள்ளைகளே... உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது...*

*எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்...!!!*

*அப்பாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகளின் வாழ்வு இனிமையாக அமையும்.*

Thiruneeru/Viboothi

ஹரி ஓம் !
அன்பான காலை
*ஆனந்த வணக்கம் ..!* 🍃

இன்று செவ்வாய்க் கிழமை ...💖

*திருச்செந்தூர்*
எத்தினையோ முறை சென்று முருகனை தரிசித்தபின் பிரஸாதம் விபூதி வாங்கி வந்துள்ளேன் . ஆனால் இப்போது தான் பன்னீர் இலை விபூதியின் மகிமை தெரிந்தது ஆனால் இப்போது இலை விபூதி கிடைப்பது அரிது .அவ்வளவு சிரமம் நீங்கள் முருகனை தரிசித்தபின் இலை விபூதியை கோயில் அலுவலகத்தில் கேட்டு வாங்கிவிடுங்கல் ..........
 
"அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே"

பொருள்
"தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."

*ஆதிசங்கரர் திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில்* இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் 'பத்ர பூதி' என்பது என்ன?

விபூதியின் வரலாறு
'பத்ர' என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.

இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.

இலை விபூதியின் வரலாறு : செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.

எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். *பன்னீர் இலையில்* பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் *வேத மந்திர சக்திகள் நிறைந்து* விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.

தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.

ஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீறும்
ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.

அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.

கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.

அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.

தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.

விபூதியே கூலி
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.

திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.

"என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்" என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.

"இலையமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை.அடுபகை சற்றேனும் இலை.படுபிணி நிரப்பும்
இலை,அளற்றுழன்று வீழ்தல் இலை,பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்தெடுத்துதவல் கண்டார்"
என்று பாடுகிறார்.

விபூதியின் மகிமையைப் பாடவந்த அருணகிரிநாதரும்,
"ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணையதென்று..."

என்று பாடுகிறார்.
நாமும் "ஆறுமுகம்" என்று
ஆறு முறை ஓதி *இலை விபூதியைத் தரித்து செந்திலாண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக*

நன்றி: 2013 மார்ச் மாத ஞான ஆலயம்

Saturday, December 16, 2017

Real love

படித்தேன் அழுதேன்   எனக்கு 77 வயது!
அன்பின் நீரூற்ற மறந்த
எத்தனையோ முதியவர்களில்
நானும் ஒருவன்!
இருக்கின்ற நான்கு மகன்களில்
ஒவ்வொரு மாதமும் ஒரு மகனிடம்!
இப்போது இருப்பது மூன்றாவது மகனிடம்!
இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது
கடைசி மகனிடம் செல்ல!
இப்போதிருந்தே வயதான விரல்களை கொண்டு
எண்ணிக்கொண்டு இருக்கிறேன்
கடைசி மருமகளிடம் செல்லும் நாட்களுக்காக!
போன தீபாவளிக்கு இரண்டாவது மருமகள்
வாங்கித்தந்த வெள்ளை வேட்டி
பழுப்பு நிறமாகி பலநாட்கள் ஆகிவிட்டது!
முதல் மகன் வாங்கித்தந்த கண்ணாடி
உடைந்து மூன்று வாரங்கள் ஆகிவிட்டது,
இப்போது இருக்கும் கோபக்கார மகனிடம் கேட்டால்
என்ன சொல்வானோ என்று
பயந்து கண்ணாடியை ஒளித்து வைத்துவிட்டு
வெறுங்கண்களோடு தடுமாறிக்கொண்டு
இருக்கிறேன்!
கடைசி மருமகளிடம் சொல்லி தான்
மாற்றிக்கொள்ள வேண்டும்!
இன்னும் நான்கு நாட்கள் தான் என்பதால்
எல்லோரும் வேலைக்கு போனபின்பு
என்னுடைய வேட்டி ஜிப்பாக்களை
துவைத்து வைத்துக்கொள்ள வேண்டும்,
துணி துவைக்கும் மிஷின் இருந்தாலும்
என்னுடைய துணிகளை தனியாகத்தான்
போடவேண்டும் என்று சொல்லி
அவர்களின் ஆடையோடு கூட
ஒட்டவிடாமல் ஏனோ அந்நியமாக வைத்திருக்கிறாள்!
கஷ்டமாக இருந்தாலும் மகனிடம் கூட
எதுவும் சொல்வதில்லை,
மருமகளும் சொல்லவிடுவதில்லை!
இன்னும் நான்கு நாட்கள்தானே என்று
ஹாஸ்டலில் இருந்து ஆசையோடு
வீட்டுக்கு ஓடும் குழந்தையைப்போல்
கடைசி மருமகளின் வீட்டு போக
என்னுடைய உடைகளை நானே
ஆர்வமாக துவைத்துக்கொண்டிருக்கிறேன்!
கடைசி மகன் மற்றவர்களை போல்
கார் சொந்த வீடு என்று வசதியாக இல்லை,
வாடகை வீடு தான், இரண்டு பேருக்கும்
இரண்டு மோட்டார் பைக்குகள்
இருக்கிறது!
நான் ஊருக்கு போகும்போதெல்லாம்
மருமகள் தான் ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு
பஸ் ஸ்டேண்டு வருவாள்!
அந்த ஸ்கூட்டரில் உட்கார்ந்து கொண்டு
போவதில் அப்படி என்ன ஆனந்தமோ
எனக்கு தெரியாது, என்னென்ன நடந்தது
என்று அவள் கேட்டுக்கொண்டே போக
நான் பின்னால் உட்கார்ந்து வேடிக்கை
பார்த்தபடி யாரைப்பற்றியும் எந்த குறையும்
சொல்லாமல் நல்லதை மட்டுமே
சொல்லிக்கொண்டு போவேன்!
அவள் கெட்டிக்காரி என்பதால்
போகும் வழியில் எனக்கு பிடித்த
ரோஸ்மில்க் வாங்கி கொடுத்து
வேடிக்கை பார்க்கும்போது
கண்டுபிடித்து விடுவாள்!
வீட்டுக்கு போனதும் என்னுடைய
கட்டை பையை ஆராய்ச்சி செய்து
மருந்து மாத்திரைகளாவது சரியாக
வாங்கி கொடுத்திருக்கிறார்களா என்று
தேடிப்பார்த்து திட்டுவாள்!
அதில் அவளுக்கு பிடித்த பாதுஷா சுவீட்டை
நான் வாங்கி வந்திருப்பதை பார்த்து
சிரித்துவிடுவாள்!
இவளை ஏன் எனக்கு மகளாக பெற்றுத்தரவில்லை என்று
மீனாட்சியிடம் சண்டை போடக்கூட
அவள் அருகில் இல்லாமல் எனக்கு முன்னால்
போய் சேர்ந்துவிட்டதில் நிறைய
வருத்தம் எனக்கு!
நான்கு நாட்கள் கழித்து
பஸ்ஸில் போய் இறங்கினேன்,
எப்போதும் போல் எனக்கு முன்வந்து
காத்திருந்தாள்!
ஓடி வந்து பையை வாங்கிக்கொண்டாள்,
ஸ்கூட்டரில் பத்திரமாக உட்கார
வைத்துக்கொண்டாள்,
உங்களை ஷேவிங் பண்ண கூட
கூட்டிட்டு போகா நேரம் இல்லையாமா
அவங்களுக்கு, அவ்ளோ பெரிய ஆளுங்களா
ஆயிட்டாங்களா எனும்போதே
அதெல்லாம் இல்லம்மா ரெண்டுபேரும்....
என்று ஆரம்பிக்கும்போதே
இப்படியே பேசி பேசி அவங்களை
காப்பாத்திட்டு இருக்காதீங்கப்பா
பேசாம வாங்க என்று ரோஸ்மில்க் கடைக்கு
போவதற்குள் சவரக்கடைக்கு தான்
அழைத்து சென்றாள்!
கண்ணாடி என்ன ஆச்சி என்று முறைத்தாள்,
பெயிலான மார்க் சீட்டை காட்டும்
குழந்தையை போல் தயங்கி தயங்கி
ஒரு பக்கம் உடைந்த கண்ணாடியை
காட்டினேன்!
கோபத்தை வெளிக்காட்டாமல்
கண்ணாடி மாற்ற அழைத்து சென்றாள்!
இதுக்கு தான் உங்களை
அனுப்ப மாட்டேன்னு சண்டை போடுறது
புரியுதாப்பா....என்று முறைத்தாள்
என்னிடம் பதிலில்லை!
ஊர் உலகத்துல யாரும் எதுவும்
சொல்லிட கூடாதுன்னு பெருமைக்கு
கூட்டிட்டு போறது அப்புறம் உங்களை
கஷ்டப்படுத்தி அனுப்புறது.. இதே
வேலையா போச்சி எல்லாருக்கும்
என்று முணுமுணுத்துக்கொண்டே
கண்ணாடியை மாற்றிக்கொடுத்தாள்,
துணியெல்லாம் சுத்தமா
துவைச்சிருக்கே நீங்கதானே துவைச்சீங்க
பொய் சொல்லாம சொல்லுங்க
என்று டீச்சரை போல் முறைக்க
என்ன செய்வது என்று தெரியாமல்
பாதி பற்களோடு சந்தோஷமாய் சிரித்தேன்,
அவளும் சிரித்துவிட்டாள்!
எனக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கி
பையை நிரப்பிக்கொண்டு
வீட்டுக்கு அழைத்து சென்றாள்!
ஸ்கூட்டரில் உட்கார்ந்து செல்லும்போது
லேசா மயக்கமா இருக்கு
சாஞ்சிக்கட்டுமாம்மா என்று கேட்டேன்
கொஞ்சதூரம் தான்பா போயிடலாம்
பத்திரமா சாஞ்சிகொங்க என்று சொல்ல
மெதுவாக சாய்ந்துகொண்டேன்!
உண்மையில் எனக்கு மயக்கமெல்லாம் இல்லை,
நான் பெறாத மகளின் மீது
சாய்ந்துகொள்ள ஆசையாக இருந்தது,
அதனால் தான் பொய்சொல்லி
சாய்ந்துகொண்டேன்!
இன்னும் ஒரு மாதத்திற்கு
அவளின் செல்லதிட்டுகளுக்கு நடுவில்
காணாமல் போகும் என் முதுமையின்
ஊமைக்காயங்கள்!

Shangu Flower

சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சார்ந்த்து. இதன் பூக்கள் நீலநிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இதன் பூக்கள் சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ எனப் பெயர் வந்தது. இதற்கு காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான் என்றும் வேறு உண்டு. நீல மலருடையதைக் கறுப்புக் காக்கணம் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.

இதன் இலை, வேர் மற்றும் விதை முதலியவை மருத்துவ குணம் கொண்டவை. இது புளிப்புச்சுவை கொண்டதாக இருக்கும். இது சிறுநீர் பெருக்கும், குடற்பூச்சிகளை கொல்லும். தாது வெப்பு அகற்றும். வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றை குணப்படுத்தும்.
ரத்த குழாய் அடைப்பு நீங்கும்

அழகுக்காக வளர்க்கப்படும் சங்குப்பூக்கள், ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சங்குப்பூக்களை பறித்து தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்து வர ரத்தக்குழாயில் உள்ள அடைப்பு நீங்கும்.
சங்குப்பூ, வேர், திப்பிலி, விளாம்பிசின், ஆகியவை வகைக்கு 10 கிராம் எடுத்துக்கொண்டு 15 கிராம் சுக்குடன் நீர் விட்டு அரைக்க வேண்டும். சிறு சிறு மாத்திரைகளாக செய்து நிழலில் காயவைத்து பத்திரப்படுத்தவும். ஒரு மாத்திரை கொடுக்க நன்கு பேதியாகும். சிறுகுழந்தைகளுக்கு அரை மாத்திரை கொடுக்க வேண்டும்.
நெறிகட்டிகள் குணமாகும்
சங்குப்பூ, இலை, உப்பு சேர்த்து அரைத்து நெறிகட்டிகள் மீது பூச கட்டிகள் கரையும். குழந்தைகள் அடிக்கடி இருமலால் சிரமப்பட்டால் அவர்களுக்கு சங்குப்பூக்களை வதக்கி இடித்து சாறு பிழிந்து அச்சாறில் ஒரு சங்கு அளவு அல்லது குறைந்த அளவு பருக வேண்டும்.
நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்தி வர வியர்வை நீங்கும்.
.
சங்குப்பூவின் இலைகளை சட்டியல் இட்டு இளவறுப்பாக வறுத்து நன்கு சூரணம் செய்து கொண்டு 2 மணிக்கு 1 தடவை 6 முறை சாப்பிடச் சுரம், தலைவலி ஆகியவை தீரும். சங்கு பூவின் இலைச்சாற்றைக் கொண்டு புடமிட தங்கம் பஸ்பமாகும்
பெண்கள் பிரச்சினை தீரும்
வெள்ளைக் காக்கரட்டான் வேர், கட்டுக் கொடி இலை, கீழாநெல்லிச் சமூலம், பெருநெருஞ்சில் இலை, அறுகம்புல் வகைக்கு 1பிடியுடன் 5,6 மிளகு சேர்த்து மை போல் அரைத்து நெல்லிக்காயளவு தயிரில் கலந்து சாப்பிட பெண்களுக்கு ஏற்பட்ட நாள்பட்ட வெள்ளைப்படுதல் தீரும்.

வேரைப் பாலில் அவித்து, பின்னர் அதனை பாலில் அரைத்து சிறிதளவு காலை மாலை பாலில் சாப்பிட மேகவெள்ளை, பிரமேகம், தந்தி மேகம், சிறுநீர் பாதை அழற்சி, நீர் எரிச்சல் ஆகியவை தீரும்.
கருங்காக்கரட்டான் வேரை பாலாவியில் வேக வைத்து உலர்த்தி பாதியளவு சுக்குடன் பொடித்து காலை மாலை 2 சிட்டிகை வெந்நீருடன் கொள்ள வாத நோய், வாயுவலி, சீதளம் நீங்கும்.
குழந்தைகளுக்கு மருத்து
இதனை குழந்தைகளுக்குக் கொடுக்க மந்தம், மலச்சிக்கல் நீங்கும்.
நெய்யில் வறுத்து இடித்த விதைச் சூரணம் 5 முதல் 10 அரிசி எடை வெந்நீருடன் கொடுக்க குந்தைகளுக்கான இழப்பு, மூர்ச்சை, நரம்பு இழுப்பு ஆகியவை தீரும்.
நாள் பட்ட கப நோய்களுக்கு காகட்டான் பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து இருப்பத்தி நான்கு கிராம் அளவு எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வர எளிதில் குணம் தரும்.
காக்கட்டான் வேர்ப் பட்டையை ஊற வைத்த ஊறல் குடிநீரை அருந்தி வர, சிறுநீர்ப்பை நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல், வலி முதலிய நோய்களும் குணமாகும்.