Wednesday, March 28, 2018

Ego-Tamil

🚗🚕ஒரு பெரிய கார் கம்பெனியில் ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். படுசுட்டி மட்டுமல்ல புத்திசாலியும் கூட..

சில காலம் கழித்து அவன் தானே ஒரு காரை வடிவமைத்தான்.. அதை அவனின் மேலாளரிடம் காண்பித்தான்..

அற்புதம் என்றார் மேலாளர்..

இது போல் எந்த கம்பெனியும் தயாரிக்கவில்லை.. உடனே காரை உருவாக்குவோம் என்று அந்த கம்பெனி முதலாளியின் அனுமதியோடு காரை தயாரித்தனர்..

முதலாளிக்கு மிகுந்த சந்தோஷம்.. முதல்கார் கண்ணை கொள்ளை கொண்டது.. அனைவருக்கும் மகிழ்ச்சி..

காரை மார்க்கெட்டிங் பிரிவுக்கு எடுத்து செல்ல முற்படும் போது தான் தெரிந்தது..

காரின் உயரம் வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் அதிகம்..

ஆஹா..

இளைஞன் சோர்ந்தான்.. தன்னையே நொந்து கொண்டான்..

ஆளாளுக்கு ஐடியா கொடுக்க ஆரம்பித்தனர்..

வாயிலின் மேற்பகுதியை உடைத்துவிட்டு காரை வெளியே எடுத்துவிடலாம்.. பின்னர் சரிசெய்யலாம் என்றார் மேலாளர்..

காரை கஷ்டப்பட்டு இருக்கும் வாயில் வழியே எடுத்து செல்லலாம்.. மேற்பகுதியில் கீறல்கள் ஆகும்.. அதை பெயிண்டிங் மூலம் சரிசெய்யலாம் என்றார் பெயிண்டர்..

முதலாளிக்கு மனது ஒப்பவில்லை.. புது காரின் மீது கீறல்களை நினைக்கவே அவருக்கு முடியலை..

அனைவருக்கும் குழப்பம்.. முகத்தில் ஏமாற்றமும் வெறுமையும் ..

இவ்வளவு அழகான புது வடிவமைப்புடன் உருவாக்கிய காரை வெளியே கொண்டு செல்ல முடியலையே..

இதை அனைத்தையும் கவனித்து கொண்டு இருந்த வயதான வாட்ச்மேன் தயங்கி தயங்கி முதலாளியிடம் "ஐயா.. நான் ஒன்று சொன்னால் கேட்பீர்களா? அனுமதி உண்டா?" என்றார்..

அனைவருக்கும் ஆச்சரியம்.. இந்த கிழவன் என்ன சொல்லப்போகிறான் என்று..

ம்..ம்..ம்.. சொல்லு.. சொல்லு..

வாயிலின் உயரத்தைவிட ஒரு இன்ச் தான் கார் உயரம் அதிகம்.. காரின் நான்கு டயர்களின் காற்றை இறக்கி விட்டால் காரை சுலபமாக வெளியே எடுத்துவிடலாம்.. பின்பு காற்றை நிரப்பிக்கொள்ளலாம்..

அடடே.. எவ்வளவு சுலபமான வழி.. எந்த சேதமும் இன்றி..

வாழ்க்கை மிக சுலபமானது.. வாழ்வது ஒரு முறை.. அதை அனுபவியுங்கள்..

ஒரு இன்ச் உயரம் போலவே ஒரு இன்ச் ஈகோ & ஒரு இன்ச் கோபம் என எல்லாவற்றையும் டயரிலிருந்து காற்றை கழட்டி விடுவதைப்போல் கழட்டி எறியலாம் தானே..

Sunday, March 18, 2018

Natural water Purifier

செயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. நீரை குளிர்விக்க பண்டைய காலங்களில் மண்பாண்டத்தை உபயோகப்படுத்தினார்கள்.

            அப்படிப்பட்ட ஒரு சுத்திகரிப்பானை பற்றி இங்கு காண்போம்.

            தேற்றா அல்லது தேத்தா(Strychnos potatorum) என்பது ஒருவகை மரம். இது தமிழிலக்கியத்தில் இல்லம் என்றும் தேத்தாங்கொட்டை, தேறு, தேற்றா என்ற ஆகு பெயர்கள் பின்னர்த் தோன்றின.

             பளபளப்பான சற்று நீண்ட கரும்பச்சை இலைகளையும், உருண்டையான விதையினையும் உடைய குறுமரம்.

            தமிழகத்தின் மலைக்காடுகளிலும், சமவெளிகளில் ஒவ்வோர் இடத்தில் காணப்படுகிறது. இதன் பழம்,விதை, ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை. திருக்குவளை என்னும் திருக்கோளிலி தலத்தின் தலமரமாக விளங்குவது தேற்றா மரமாகும்.தேற்றா வனத்தின் நடுவில் (கடக்கா வனம்) பிரம்மா ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார் என்று புராணக் கதை ஒன்று கூறுகிறது.

             தேற்றாங்கொட்டை என்பது சேறுடன் கலங்கிய நீரைத் தெளிய வைக்க தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படும் தேற்றா மரத்தின் விதை ஆகும்.

              குளம், ஊருணிகளின் இருந்து பெறப்படும் நீர் கலங்கலாக இருக்கும். இந்நீரை அப்படியே குடிக்க இயலாது. எனவே சிவகங்கை, தஞ்சை மாவட்டங்களில் நீரைத் தெளிய வைக்க தேத்தாங்கொட்டையை கலங்கிய நீருள்ள பானையின் உட்புறம் தேய்ப்பர். சில மணி நேரங்களுக்கப் பிறகு பானை நீர் தெளிந்து காணப்படும்.

              இந்தப் பண்பு “இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து” என்ற கலித்தொகை பாடல் வரியிலும் (142:64), பெருங்கதை பாடல் வரியிலும் (35:215) சுட்டப்பட்டுள்ளது.

பிங்கல நிகண்டு. தொல்காப்பியத்திலும் இது குறிக்கப்பட்டுள்ளது.

“இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே (தொல். 313)”

                  தேற்றாமரத்தின் மலர்களை கண்ணியாகக் கட்டி தலையில் அணிந்ததாக நற்றிணைப் பாடல் கூறுகிறது.

“குல்லை குளவி கூதளம் குவளை

இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் (நற். 376:5-6)

                  பிரகத்சம்ஹிதை என்ற வடமொழி நூலும் இந்தப் பண்பு பற்றி குறிப்பிடுகிறது.

“அஞ்சனா (பெரிய ஏலக்காய்),
முஸ்டா (கோரைக்கிழங்கு),
உசிரா (வெட்டி வேர்),
நாகா (நன்னாரி),
கோசடக்கா (நுரைபீர்க்கை),
அமலக்கா (நெல்லி)

போன்றவற்றைப் பொடி செய்து, அவற்றைத் தேத்தாங் கொட்டைத் தூளுடன் கிணற்று நீரில் கலந்தால் கலங்கிய, கசந்த, சப்பென்ற, உப்பான, ருசியற்ற, நாற்றமடிக்கும் நீர் நன்கு தெளிந்து ருசியும் மணமும் கொண்ட நல்ல நீராகும்” இது சுரபாலர் எழுதிய விருக்ஷாயுர்வேத நூலின் 299-300-ம் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழ் வடிவம்.

பீப்பாய் நீர் தெளிய

                   கடல் நீரை குடிநீராக்கும் தொழில் நூட்பத்தை அப்போதே அறிந்து கடல்நீரை குடிநீராகப் பயன்படுத்தினர். ஆப்பிரிக்கக் கண்டத்து அடிமைகள் அமெரிக்கக் கண்டத்துக்குக் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டபோது, பீப்பாய் நீரைச் சுத்தம் செய்வதற்காகப் புளியங்கொட்டை பயன்படுத்தப்பட்டதைப் போன்று, பண்டைய தமிழகக் கப்பல்களில் நீண்ட தூரப் பயணங்களின்போது, நீரைத் தெளிவாக்கிச் சுத்தம் செய்யத் தேத்தாங்கொட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

                இன்றும்கூடப் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டக் கிராமங்களில் தேத்தாங்கொட்டை நீரைத் தெளிவாக்கவும் சுத்தமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

                  அண்மைக்கால ஆய்வுகளின்படி பொடி செய்யப்பட்ட தேத்தாங்கொட்டைத் துகளிலுள்ள கார்போஹைட்ரேட் பல்வேறு வேதிப்பொருட்களை
(கன உலோகங்களையும் சேர்த்து) உறிஞ்சி நீரைத் தெளிவாக்குகிறது.

வறண்ட நிலத் தாவரம்

கடகம், ஜலதம், அக்கோலம், சில்லகி, சில்லம்

என்ற இதர பெயர்களைக் கொண்ட இந்தத் தாவரத்தின் தாவரவியல் பெயர் Strychnos potatorum
(தாவரக் குடும்பம்: Loganiaceal) ;

                 இது எட்டி மரத்துடன் தொடர்புடைய ஒரு தாவரம். ஏறத்தாழ 30 முதல் 50 அடி உயரம்வரை வளரக்கூடிய இந்த மரம், நல்ல நிழல் தரும் மரமும்கூட.

                  குறிப்பாக, முல்லை திரிந்த பாலை நிலப்பகுதிகளில் வளர்கிறது.

                 சங்க இலக்கியக் காலத்தில் முல்லை நிலத்தில் செழிப்பாக வளர்ந்ததாக அறியப்பட்டுள்ள இந்தத் தாவரம்தற்போது குறைந்த எண்ணிக்கைகளில் காணப்படுகிறது.

“முல்லை இல்லமொடு மலர …. கார் தொடங்கின்றே”,

“இல்லம் முல்லையொடு மலரும்”

என்ற அகநானூற்று வரிகள்

(அகநானூறு 364:7, 9; 1: 1, 2,7) மட்டுமின்றி

“நரு முல்லை உகு தேறு வீ “

என்ற பொருநராற்றுப்படை வரியும் மேற்கூறியதற்குச் சான்றாகும்.

              கார்காலத்தில் மலரும் இந்த மரத்தின் பூக்களைச் சங்ககால மக்கள் சூடினர்

(குல்லை குளவி கூதளங் குவளை இல்லமொடு மிடைந்த ஈர்ந்தனை கண்ணியன்” நற்றிணை : 5:6).

              தற்காலத்தில் யாரும் சூடுவதில்லை.

               தமிழகத்தில் அழிந்துவரும் தாவரங்களில் தேற்றா மரமும் ஒன்று. இதைப் பாதுகாப்பதற்கு மக்களும் அரசும் அதிக முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

                இதன் மருத்துவப் பண்புகளைப் பிரபலப்படுத்த, அறிவியல் சார்ந்த ஆய்வுகளும் அதிகம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பயன்கள்

இதன் அனைத்து உறுப்புகளும் மருத்துவத் தன்மை கொண்டது.
பழம், விதை இரண்டுமே சளியை நீக்கும்.
கபத்தைப் போக்கும்.
சீத பேதி, வயிற்றுப் போக்கு குணமாக்கும்.
புண்களை ஆற்றும், கண் நோய் போக்கும், சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்கும்.
கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டதும், உஷ்ணத்தை குறைக்க கூடியதும், ரத்த ஓட்டத்தை சீராக்க வல்லது.பால்வினை நோயால் ஏற்படும் புண்களை குணப்படுத்த கூடியதுமான தேத்தான் கொட்டை சூரணம் பல மருத்துவகுணங்களை கொண்டது.
சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.
சிலர் தேற்றா மரத்தின் காய்களை இடித்து கொட்டையை எடுத்த பின் கிடைக்கும் சக்கையைக் கரைத்து மீன்கள் உள்ள குட்டைகளில் இடுவர். இச்சக்கையின் சாறு மீன்களை ஒரு வித மயக்க நிலைக்கு இட்டுச் சென்று கரையில் ஒதுங்கச் செய்யும். இவ்வாறு மீன் பிடிப்புக்கும் தேற்றா மரம் பயன்படுகிறது.

Sunday, March 11, 2018

Simple story from Ramayanam-Tamil

*இராமாயணத்தில் ஒரு காட்சி.*....

ஓர் கண்ணோட்டம்.
வாலியும் சுக்ரீவனும்
அண்ணன் தம்பிகள்.
வாலி கொடியவன்.
சுக்ரீவன்நல்லவன்.

வாலி சுக்ரீவனுடைய
நாட்டையும்மட்டுமல்ல
அவனதுமனைவியையும்
அபகரித்துக்கொண்டான்.

சுக்ரீவனால்
அவனதுஅண்ணனை எதிர்த்து
ஒன்றும்செய்யமுடியாமல்
திகைத்துக்கொண்டிருந்தான்.

ஸ்ரீ ராமன்
காட்டில்வந்துகொண்டிருந்தபோது
சுக்ரீவன்
ஸ்ரீராமனைச் சந்தித்தான்.

ஸ்ரீராமா
அபயம்
என்று நமஸ்கரித்தான்.

ஸ்ரீராமனிடம்
தன்வரலாற்றைச் சொல்லி
தான்இழந்தது
அனைத்தையும்
வாலியிடமிருந்து
மீட்டுத் தரும்படி வேண்டினான்.

ஸ்ரீராமனும்
அப்படியே ஆகட்டும் என்று
வாக்களித்தான்.

வாலி மிகுந்த பலசாலி.

ஒரேபாணத்தில்
ஏழு மரங்களை யாரால்
துளைக்கமுடியுமோ
அவர்களால் மட்டுமே
வாலியிடம் சண்டை
போடமுடியும்.

நீங்கள்அப்படிச் செய்து
காட்டுவீர்களா என்று
சுக்ரீவன் ஸ்ரீ ராமனைக்
கேட்டான்.

ஸ்ரீராமனும்
ஒரேபாணத்தைவிட்டு
ஏழு மரங்களைத்
துளைத்துக்காட்டினார்.

சுக்ரீவன்
மிகவும் மகிழ்ந்தான்.

நீ இப்பொழுது
வாலியிடம் சண்டை போடு.

தக்க சமயத்தில்
நான் உனக்குத் துணையாக
வருவேன் என்று
ஸ்ரீ ராமன்சொன்னான்.

இந்த வார்த்தையை நம்பி
சுக்ரீவனும்
வாலியைச் சண்டைக்கு
அழைத்தான்.

வாலியும் சண்டைக்கு
வந்தான்.
இருவரும் சண்டை இட்டார்கள்.

வாலி
சுக்ரீவனை
நையப் புடைத்து
அனுப்பினான்.
பலமாக அடிபட்டு வந்த சுக்ரீவன்,

ஸ்ரீராமா
உன்னை நம்பி அல்லவா
நான் அவனிடம் சண்டைக்குச்
சென்றேன்.

இப்படிக் கைவிட்டு விட்டாயே.
இது நியாயமா என்று
அழுதான்.

சுக்ரீவா,
நீயும் வாலியும்
ஒரே மாதிரி இருந்ததால்
யார் சுக்ரீவன் யார் வாலி
என்று என்னால்
அடையாளம் காணமுடியவில்லை.

நான் அவன் என்று
உன்னைத் தாக்கிவிட்டால்
என்னசெய்வது என்றுதான்
பேசாமல் இருந்துவிட்டேன்.

இப்பொழுது
நான்ஒரு மாலைதருகிறேன் ,

இதைக் கழுத்தில் அணிந்துகொண்டு
நீ அவனிடம் சண்டைக்குப் போ.

நான் நிச்சயம்
உன்னைக்காப்பாற்றுவேன்
என்று
ஸ்ரீராமன் சொல்லி,

சுக்ரீவனை மீண்டும்
வாலியிடம்
சண்டைக்கு அனுப்பினான்.

வாலியிடம்
சண்டை போடுவதாய் இருந்தால்
அவன் எதிரில் நின்று
சண்டை போடக்கூடாது.

அவன் எதிரில்
யார் வருகிறார்களோ
அவர்கள் பலத்தில்
பாதியை வாலி
எடுத்துக் கொள்வான்
என்று
சுக்ரீவன் சொல்லிவிட்டுச்
சண்டைக்குப் போனான்.

சுக்ரீவன் சொன்னது போல
ஸ்ரீ ராமனும் வாலியின்
பின்னால் மறைந்து நின்று
வாலியின் மீது அம்பு தொடுத்தான்.

வாலி
ஸ்ரீ ராமனைப் பார்த்து

ஸ்ரீ ராமா
உனக்கும் எனக்கும் எந்தப் பகையும்
இல்லை.

நீ என்னைக் கொல்வது
தர்மத்திற்குப்புறம்பானது.

எதிரில் நின்று
சண்டை போடுவதே வீரனுக்கு அழகு.

நீயோ
கோழைபோல்
மறைந்து நின்று
என்மீது
அம்பு தொடுத்து
என்னை சாக அடிக்கிறாய்.

வானத்து சந்திரனில்
களங்கம் இருப்பதுபோல்

காலம்உள்ளளவும் நீ செய்த
இந்தக் களங்கமான செயல்
உன்பெயரோடு சேர்த்து
இனி
உன்னை எல்லோரும்
ராமச்சந்திரன் என்று
அழைக்கட்டும் .

நீ
ராமனல்ல ராமச்சந்திரன் என்று
சபித்தான்.
ராமாயணத்தில் இந்தச் சம்பவம் ஏன்
எழுதப்பட்டது?

இதன்மூலம் நமக்கு என்ன
அறிவுரை வழங்குகிறார்கள்?

வாலியும் சுக்ரீவனும்
குரங்குகள்.

குரங்கு என்பது
நமது மனம்தான்.

வாலி கெட்ட மனம்.
சுக்ரீவன் நல்ல மனம்.

நல்ல மனதைவிட
கெட்ட மனமே
ஆதிக்கம் செய்யும்.

இதை உணர்த்தவே

வாலி
சுக்ரீவனுடைய
நாடு முதல் அனைத்தையும்
பறித்துக்கொண்டதாகச்
சொல்லப்பட்டது.

ஸ்ரீ ராமன் என்பது அறிவு.

நல்லமனம்
அறிவின் துணையை நாடியது.
ஏழு மரங்களை
ஒரே பாணத்தால் யாரால்
துளைக்கமுடியுமோ,

அவர்கள்தான்
வாலியை வெல்லமுடியும் என்றது
என்னவென்றால் ,

காமம்,
குரோதம்,
லோபம்,
மோகம் ,
மதம்,
மாச்சர்யம்,
கொலை
என்ற ஏழையும்

வைராக்கியம் என்ற
ஒரே பாணத்தால் யாரால்
வெல்லமுடியுமோ
அவர்களால்தான்
கெட்ட மனதை
வெல்லமுடியும் என்பதே.

நமக்குள்
நல்ல மனம் எது ,
கெட்ட மனம் எது என்று

நம்முடையஅறிவிற்குப்
புரியாமல்இருப்பதே
ஸ்ரீ ராமனுக்கு

முதலில் வாலி யார்?
சுக்ரீவன் யார்? என்று
புரியாமல்போனது.

வாலியின் எதிரில்
நின்று சண்டை போடக்கூடாது
என்றது ஏன்?

கெட்ட மனதை
நேரில் நின்று அடக்கமுடியாது,

....