Tuesday, August 7, 2018

பிரத்தியங்கரா தேவி வரலாறு

தனது பக்தன் பிரகலாதனை கொடுமைப்படுத்திக்கொண்டு இருந்த ஹிரண்யகசிபு என்ற அசுரனை அழிக்கமகா விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டி இருந்தது.அசுரன் பெற்று இருந்த வரத்தின்படி அவனை மனிதர்களோ, மிருகங்களோ அல்லது வேறு ஆயுதங்களினாலோ கொல்ல முடியாது.  அவன் ரத்தம் கீழே சிந்தினால் அதில் இருந்து மீண்டும் மீண்டும் அவன் வெளிவருவான். ஆகவே மனிதரும் அல்லாமல், மிருகமும் அல்லாத மிருகத் தலைக் கொண்ட ஒரு பயங்கர உருவைக் கொண்ட ஜீவனாக அவதாரம் எடுத்த நரசிம்மர் அந்த அசுரன் பிரகலாதனுடன் நின்று கொண்டு இருந்த இடத்தில் இருந்த ஒரு தூணில் இருந்து அதை உடைத்துக் கொண்டு வெளிவந்து அந்த அசுரனை தன் தொடை மீது பிடித்து வைத்துக் கொண்டு அவன் உடலை தன் விரல் நகத்தினால் கீறி அவன் உடலில் இருந்து வெளி வந்த ரத்தத்தைக் குடித்து அவனை கொன்றார்.

அவன் ரத்தம் பூமியில் சிந்தினால் மீண்டும் அவன் உயிர்பிழைப்பான் என்பதற்காக சிவபெருமான் சரபேஸ்வரர் என்ற உருவத்தை அதாவது சிங்கத்தின் முகம், பாதி மனிதர் உடல் , பாதி சரபு என்ற பறவை. அந்த பறவையின் இறகுகளாக காளி மற்றும் துர்க்கைஉருவை எடுத்த சிவன் அசுரனைக் கொன்றுகொண்டு இருந்த நரசிம்மரை அசுரனுடன் சேர்த்து ஆகாயத்தில் தூக்கி வைத்துஅரக்கன் சிந்திய ரத்தத்தை பறவை கீழே விழாமல் குடித்தது.

அசுரனின் ரத்தம் கீழே சிந்தாமல்அவன் உயிர் பிழைக்க வழி இல்லாமல் மரணம் அடைந்தான்.அரக்கனைக் கொன்ற பின்னும் நரசிம்மரின் இரத்த வெறி அடங்கவில்லை.உலகம் முழுவதையும் அவர் அழிக்கத் துவங்க தேவர்கள் சரபேஸ்வரர் உருவில் இருந்த சிவபெருமானிடம் அடைக்கலம் ஆயினர்.

சிவபெருமானும் தனது மூன்றாவது கண்ணில் (சரபேஸ்வரர் நெற்றியில்இருந்து) இருந்து ஒரு பயங்கர தேவதையை வெளிப்படுத்தினார்.அவள் ஆயிரத்தி எட்டு சிங்கத்தின் , இரண்டாயிரத்து பதினாறு கண்கள், அதைத் தவிர மூன்றாவது கண், இரண்டாயிரம் கைகள், அந்தக் கைகளில் இருந்த விரல்களில் புலியின் நகங்கள், யமனைப் போன்ற கரிய நிறம், நீல ஆடை,  சரீரமோ யானயை விட பத்து மடங்கு பெரியது என்ற விஸ்வரூப தோற்றத்துடன் வெளி வந்தாள்.முமூர்த்திகளின் மனைவிகளான பார்வதி, லஷ்மி மற்றும் சரஸ்வதி போன்ற மூவருமே சிவ பெருமான் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி ஒன்று சேர்ந்து தமது சக்திகளை உள்ளடக்கிய பிரத்தியங்கரா தேவியை உருவாக்கினார்கள் எனக் கூறுகின்றது புராணம் ..

அப்படி வெளிவந்த உடனேயே அவள் நரசிம்மரை நோக்கி ஓடினாள். தன்னை விட அதி பயங்கர ரூபத்துடன் வந்துள்ள ஜீவனைக் கண்ட நரசிம்மர் ஓடத் துவங்க அவரை துரத்திப் பிடித்த பிரத்தியங்கர தேவி அவரை தனது வாய்க்குள் போட்டுக் கொண்டு அப்படியே விழுங்கி யதும்அவள் கோபம் தணிந்தது. சாந்தம் அடைந்தவள் தனது விஸ்வரூப தரிசனத்தைக் களைந்து மகா பிரத்தியங்கர தேவியாகி நின்றாள்.

( வரலாறு வேறு
தலவரலாறு வேறு )

No comments:

Post a Comment