_*திருக்குறள்*_
*🖲குறள்: 339*
*⚖உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி*
*விழிப்பது போலும் பிறப்பு*
*💪🏻அதிகாரம்: 34*
*🎙நிலையாமை*
*✍🏽சாலமன் பாப்பையா உரை:*
*👨🏻💻உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.*
*✍🏽மு. வரதராசனார் உரை:*
*👨🏻💻இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.*
*✍🏽மு. கருணாநிதி உரை:*
*👨🏻💻நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.*
*✍🏽மணக்குடவர் உரை*
*👨🏻💻உறங்குவதனோடு ஒக்கும் சாக்காடு: உறங்கி விழிப்பதனோடு ஒக்கும் பிறப்பு. இது போன உயிர் மீண்டும் பிறக்கு மென்பதூஉம், இறத்தலும் பிறத்தலும் உறங்குதலும் விழித்தலும் போல மாறிவருமென்பதூஉம் கூறிற்று*
No comments:
Post a Comment